2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

திருமுருகன் காந்தியின் கைதுக்கு யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

George   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தமிழகத்தில் நடாத்த முற்பட்டதால், குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி  உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக நேற்று இடம்பெற்ற இப்போராட்டத்தில், “ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களை விடுதலை செய், நினைவேந்தல் வெய்தவர்கள் குண்டர்களா? நினைவேந்தல் தமிழர்களின் உரிமை” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X