2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

திறப்பு விழா

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட சுன்னாகம் பொதுநூலகம், தனது சேவையை விஸ்தரித்துள்ளது.

இதற்கமைய, சுன்னாகம் பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பயணிகளின் நன்மை கருதி வாசிப்புக் கூடமொன்றை, இன்று (03) திறந்து வைத்துள்ளது.

இன்று முற்பகல்-10 மணியளவில், சுன்னாகம் பொதுநூலக பிரதம நூலகர் திருமதி ஜெயலட்சுமி சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் க. தர்ஷன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, மேற்படி வாசிப்புக் கூடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், சுன்னாகம் பொதுநூலகம், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் சுன்னாகம் உப அலுவலக உத்தியோகத்தர்கள், சுன்னாகம் தரிப்பிட ஓட்டோ சாரதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X