2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தீக்காயங்களுக்குள்ளான குடும்பப் பெண் உயிரிழப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கணவனுக்கு தேநீர் வைப்பதற்கு அடுப்பை மூட்டியதில், சட்டையில் பரவிய தீயினால் உடல் முழுவதும் பலத்த எரிகாயங்களுடன் உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண், நேற்று  காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஜுன்னா வீதியைச் சேர்ந்த முகமது ஷெரீப்நுனுஷ்கா (வயது 29) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இறப்பு விசாரணைகளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X