2025 மே 15, வியாழக்கிழமை

துப்புரவற்ற காணிகளை துப்புரவாக்கக் காலக்கொடு

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள், பராமரிக்கப்படாது பற்றைகளாகவும் கழிவு நீர் தேங்கி டெங்கு நுளம்புப் பெருகும் ஏதுநிலையிலுமுள்ள காணிகளை, வரும் 14 நாள்களுக்குள் துப்புரவு செய்து, எழுத்து மூலமாக வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு அறிவிக்குமாறு, வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் த.நடனேந்திரன், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  

இவ்வாறு துப்புரவு செய்யப்படாத, பற்றைகளாகக் காணப்படும் காணிகள், பிரதேச சபையால் பொறுப்பேற்றக்கப்பட்டு, அவை, துப்புரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படு மெனவும், அவர் கூறினார்.  

இவ்வாறு துப்புரவு செய்வதற்கு ஏற்படும் செலவீனமும் அதற்குரிய அபராதத் தொகையும், இக்காணிகளின் உரிமையாளர்கள் பிரதேச சபைக்குச் செலுத்த வேண்டுமெனவும், தவிசாளர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .