2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தூக்கத்தில் உயிரிழந்த இளைஞன்

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரவு உணவை உட்கொண்டுவிட்டு தூக்கத்துக்குச் சென்றவர் காலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் விஸ்ணுதாஸ் (வயது 21) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (08) இரவு வழமை போல் இரவு உணவை உட்கொண்டு விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலை செவ்வாய்க்கிழமை (09) நீண்ட நேரமாகியும் மகன் எழும்பாததை அடுத்து தாயார் சென்று எழுப்ப முற்பட்டுள்ளார். அதன் போது அசைவின்றி மகன் காணப்பட்டதை அடுத்து, உடனடியாக மகனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X