2025 மே 16, வெள்ளிக்கிழமை

தென்மராட்சிப் பிரதேசத்தில் துப்புரவுப் பணிகள் முன்னெடுப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

ஜனாதிபதியின்  நகரைத் தூய்மைப்படுத்துவோம் திட்டத்தின் கீழ், தென்மராட்சிப் பிரதேசத்தில் 5 இடங்களில் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சாவகச்சேரி பொலிஸார், சாவகச்சோரி நகர சபையினர் சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர், சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றத்தினர், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து, இந்தத் துப்புரவுப் பணிகளை முன்னெடுத்தனர்.

சாவகச்சேரி நகரப் பகுதியிலும் மிருசுவில்  கெற்பேலி பகுதியில் படையினரும் கொடிகாமம் பொலிஸார் கொடிகாமம் நகரப் பகுதியிலும் தென்மராட்சி பிரதேச செயலகத்தினர் மிருசுவில் தவசிக்குளம் பகுதியிலும் சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் மட்டுவில் பகுதி மக்களுடன் இணைந்து, மட்டுவில் பகுதியிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .