2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

‘தேர்தல் கால வன்முறைகளுக்கு, பிணை இல்லை’

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், டி.விஜிதா

“தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் வேட்பாளரோ, வாக்காளரோ கைது செய்யப்பட்டால், தேர்தல் முடிவடையும் வரை அவர்களுக்கு யாழ்.மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட மாட்டாது” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று (22) தெரிவித்துள்ளார்.

54 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு பிணை கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, யாழ்.மேல் நீதிமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் ஆணையகம் நீதியான, ஜனநாயக தேர்தலை நடத்துவதுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக நீதிமன்றங்கள் செயற்பட வேண்டும். அதனால் யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் பாரதூரமான குற்றங்களுக்கு தேர்தல் முடிவடையும் காலம் வரையில் பிணை வழங்கப்பட மாட்டாது.

யாழில் இதுவரையில் பாரதூரமான தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகியில்லாத போதிலும், ஒரு சில வாள் வெட்டு சம்பவங்கள், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அதனால் கொலை, கொள்ளை வாள்வெட்டு சம்பவங்கள் போன்ற சமூக விரோத செயல்களுக்கு, தேர்தல் காலத்தில் பிணை வழங்கினால், அது தேர்தல் கால வன்முறைகள் அதிகரிக்க காரணமாகி விடலாம். எனவே பாரதூரமான குற்றங்களுக்கு தேர்தல் முடிவடையும் வரையில் பிணை வழங்க முடியாது.

அத்துடன் அவை தொடர்பான அனைத்து வழக்குகளும், தேர்தல் முடிவடைந்த பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னரே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X