Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 31 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
தமிழ்தேசிய மக்கள் முன்னணி, உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டவிதிகளை மீறி மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடாத்தியதாக தொடரப்பட்ட வழக்கை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் நேற்று (30) தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் அமைப்பு ஒன்று உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டவிதிகளை மீறி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வலி,வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான சோமசுந்தரம் சுகிர்தன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, கடந்த 11ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேர்தல் பிரச்சார பணிகளுக்காக ஆலயங்களைப் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் மேற்படி விடயத்தை பொலிஸார் முறையாக அணுகவில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் ஊடாக முறைப்பாடு வழங்கியிருந்தார்.
இதன் அடிப்படையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை வேட்பாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பூசகர்கள் இருவர், சோமசுந்தரம் சுகிர்தன் மற்றும் முறைப்பாட்டை வழங்கிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் ஆகியோருக்கு நீதிமன்று அழைப்பு விடுத்திருந்தது.
குறித்த வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, காங்கேசன்துறை பொலிஸார் புகைப்படங்கள் சிலவற்றை காண்பித்து மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் நடைபெற்ற கூட்டத்தில் உள்@ராட்சி மன்ற தேர்தல் சட்டவிதிகள் எதுவும் மீறப்படவில்லை என கூறினர்.
இதனையடுத்து சோமசுந்தரம் சுகிர்தனிடம் கேட்கப்பட்டபோது, முன்னர் வழங்கிய முறைப்பாட்டைத் தவிர வேறு சான்றுகள் இல்லை என கூறினார்.
இந்நிலையில் குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதவான் தெரிவித்தார்.
20 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago