2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

தாக்கிக் கொண்டவர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வரணி இயற்றாலை பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிய குற்றச்சாட்டில் கொடிகாமம் பொலிஸாரினால் கைதான இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை, நேற்று திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.

இயற்றாலை பகுதியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வைத்தியசாலையில் இருந்து திரும்பிய இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொறுப்பதிகாரி, கைது செய்து, வழக்குப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X