2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தென்மராட்சி கலாசார விழா

Niroshini   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

தென்மராட்சி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார பேரவை ஆகியன இணைந்து நடத்தும் கலாசார விழா  புதன்கிழமை(30) பிற்பகல் 1.30க்கு சாவகச்சேரி ஐங்கரன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலர் அஞ்சலிதேவி சாந்தசீலன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட முன்னாள் மேலதிகச் செயலர் செ.சிறிநிவாசன், வட மாகாண கலாசார திணைக்கள உதவிப்பணிப்பாளர் வனஜா செல்வரத்தினம், யாழ்.மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி கிருஸ்ணனந்தன் மற்றும் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, 'தென்பொழில் - 1' எனும் நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன், கலைத்துறைக்கு சிறப்பாக சேவையாற்றிய பிரதேசத்தைச் சேர்ந்த ஐவருக்கு கலைச்சாதரம் விருது வழங்கி வைக்கப்படவுள்ளது.

இதன்படி,இலக்கியத்துக்காக மறவன்புலம் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தம், நடனத்துக்காக யசோதரா விவேகானந்தன், ஆர்மோனியத்துக்காக கந்தன் ஐயங்கன் செல்லத்துரை, இசைக்காக மாது சிரோன்மணி வேலாயுதம் மற்றும் நாதஸ்வரத்துக்காக சின்னத்துரை கந்தவேள் ஆகியோர் விருதுகளைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .