2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தாபரிப்பு பணம் செலுத்தாதவருக்கு கடூழியச் சிறை

George   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தாபரிப்பு பணம் கட்ட தவறியவருக்கு 3 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த வழக்கின் சந்தேகநபர், இதுவரையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தாபரிப்புப் பணத்தை கட்டத்தவறியிருந்தார்.

குறித்த தொகை பணத்தை அடுத்த வழக்கு தவணையில் செலுத்துமிடத்தில் தண்டனை விதிக்கப்பட்டவர், சிறைத்தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவார் என நீதவான் தெரிவித்தார். அத்துடன், மேற்படி வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X