Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், கைதடி பரவை கடல் பகுதிகளில் விளம்பர பதாகைகளுக்கு வைக்கப்பட்டிருந்த இரும்புக்களைத் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இராணுவத்தின் சிறிய ரக லொறியை, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணை முறியில் எடுத்து செல்ல, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிநி நந்தசேகரன், நேற்று செவ்வாய்க்கிழமை (20) அனுமதியளித்தார்.
கைதடி பரவை பகுதிகளில் வீதியை ஒட்டியதாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் விளம்பர பாதகைகள் அண்மைக்காலமாக திருடப்பட்டு வந்தன.
கடந்த 16ஆம் திகதி அதிகாலை ரோந்தில் ஈடுபட்ட சாவகச்சேரி பொலிஸார், விளம்பர பதாகைகளின் இரும்புக் கம்பிகளை வெட்டிக்கொண்டிருந்த 8 இராணுவத்தினரைக் கைது செய்தனர்.
அதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரர்கள், பதில் நீதவான் முன்னிலையில் 17ஆம் திகதி ஆஜர்ப்படுத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருளை விடுவிப்பதற்கு இராணுவ பொறுப்பதிகாரி, மன்றில் ஆஜராகி, நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து சான்றுப்பொருளை விடுவிக்க சட்டத்தரணியொருவர் மூலம் விண்ணப்பம் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதவான், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருளை பிணை முறியில் விடுவிக்க அனுமதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago