2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்ற மூவர் கைது

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வடமராட்சி மற்றும் அச்சுவேலி பகுதிகளில் திருட்டு மின்சாரம் பெற்று வந்த மூவரை, திங்கட்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அச்செழு, துன்னாலை வடக்கு, அல்லையம்படி மற்றும் நெல்லியடி நகரப் பகுதி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளும் நெல்லியடி, அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து, மேற்படி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போதே , குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X