2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

திருடிய நகையை செய்த இடத்திலேயே விற்றவர் மாட்டினார்

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய நகைகளை, செய்த இடத்திலேயே விற்பனை செய்ய முயற்சித்த நபரை யாழ்ப்பாணத்தைச் நகைக்கடைக்காரர் பிடித்து திங்கட்கிழமை (12) தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மல்லாகம், கல்லாரைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளவெட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடியுள்ளார்.

திருடிய நகைகளை யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் குறைந்த விலைக்கு விற்க முற்பட்டுள்ளார். அந்த நபர் கொண்டு வந்த நகை தனது கடையில் தான் செய்யப்பட்ட நகையென்பதை அறிந்த உரிமையாளர், சந்தேகம் கொண்டு நகையைக் கொண்டு வந்தவரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின்னான தகவல் வழங்கியுள்ளார்.

உடனடியாக அந்த நகையைக் கொள்வனவு செய்த உரிமையாளருக்கு அழைப்பை ஏற்படுத்திய நகைக்கடை உரிமையாளர், உங்கள் வீட்டில் நகை ஏதும் திருட்டுப் போயுள்ளதா? என விசாரித்துள்ளார்.

ஆம் என்று அவர்கள் கூறவே, நகையை விற்க வந்த நபரை மடக்கிப் பிடித்த நகைக்கடை  உரிமையாளர், தெல்லிப்பழை பொலிஸாரை வரவழைத்து, சந்தேக நபரை ஒப்படைத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X