Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 11 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஸ்ஸில் பயணி ஒருவர் தவறவிட்ட தங்கச்சங்கிலியை திருடிய இரண்டு பெண்களுக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், வியாழக்கிழமை (10) தீர்ப்பளித்தார்.
அத்துடன், சந்தேகநபரான இரண்டு பெண்களையும் கடுமையாக எச்சரித்த நீதிவான், இருவரின் கைவிரல் அடையாளங்களை பெற்று கைவிரல் அடையாள திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமத்துக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் பயணி ஒருவர் தவறவிட்ட தங்கச்சங்கிலினை குறித்த இரு பெண்களும் திருடியிருந்தனர்.
இதனை அவதானித்த சக பயணிகள், கையும் மெய்யுமாக இருவரையும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago