2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

திருநாவற்குளம் காணி தனியாருக்கு சொந்தமானது

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனிய, திருநாவற்குளம் காணி தனியாருக்கு சொந்தமானது என வவுனியா பிரதேச செயலாளரினால் காணியில் வசிப்போருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் பலர், நீண்ட காலமாக காணிகளில் அத்துமீறி நுழைந்து, வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமது காணிகளுக்கு உரிமம் வழங்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

இதன் பிரகாரம், காணி தொடர்பான ஆவணங்களை வவுனியா பிரதேச செயலாளர் உட்பட்ட குழு அடங்கலாக ஆராய்ந்ததன் அடிப்படையில், குறித்த காணி தனியாருக்கு சொந்தமானதாக இனங்காணப்பட்டமையால், காணி ஆணையாளர் நாயகத்தின் 2013-1 சுற்றுநிருபத்தின் பிரகாரம், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் www.eslims.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் மேன்முறையீட்டை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X