2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தாராபுரம் கிராமத்தில் ஆரம்ப வைத்தியசாலை திறந்து வைப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், அமைக்கப்பட்ட மன்னார் தாராபுரம் ஆரம்ப வைத்தியசாலை, நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கலந்து கொண்டு இவ் வைத்திய சாலையை மக்கள் பாவனைக்காக திறந்து  கையளித்தார்.

இந்த நிகழ்வில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரஜனி அன்டன் சிசில் என்.சி.டி. பொறுப்பு வைத்தியர் அன்டன் சிசில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் முஜாஹிர், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட், மன்னார் பொது வைத்திய அதிகாரி வைத்தியர்  ப்ரியந்தன் மற்றும்  பலரும் கலந்து கொண்டனர்.

 மேலும், இவ் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X