Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 12 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கேப்பாப்புலவு மக்கள், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி முன்னெடுத்துவரும் சாகும் வரை போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது.
விவேகானந்தன் தியீபன் (வயது 28), பொன்னுத்துரை அழகராஜா (வயது 55) ஆகியோர், இராணுவ முகாமுக்கு முன்னால் நேற்றிலிருந்து உண்ணாவிர போராட்டத்தில் இவ்வாறு குதித்துள்ளனர்.
முல்லைத்தீவு இராணுவ படைத் தலைமையகம் முன்பாக, கேப்பாப்புலவு மக்கள், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி, கடந்த 1ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம், 11ஆவது நாளாகவும் நேற்றிலிருந்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமது காணி விடுவிப்புத் தொடர்பில், யாரும் எந்த முடிவுகளையும் எடுக்காத நிலையிலேயே, குறித்த இருவரும், தமக்கான தீர்வு கோரி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று நண்பகல் 1 மணியளவில் இவர்கள் இருவரும், இந்த காணிக்கு செல்ல தங்களை ஏன் வருத்த வேண்டுமென கொதித்தெழுந்தனர். இராணுவ முகாம் வாயிலை நோக்கி கோசங்களை எழுப்பியவாறு சென்ற மக்கள், இராணுவ முகாம் வாசலை, பத்து நிமிடங்கள் வரை மறித்து, இராணுவத்தைத் திட்டித்தீர்த்தனர். அத்தோடு, தமது காணிகளை விடுவிக்குமாறும், கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago