2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு கட்டடங்கள் நேற்று வைபவ ரீதியாக  திறந்துவைக்கப்பட்டது.

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் அமைக்கப்பட்ட சனசமூக நிலைய கட்டடமும் Unu;ABITAT நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கலைமகள் முன்பள்ளி கட்டடமும் நேற்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டன.

பனிக்கன்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்  தவசீலன்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளும்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான க.சிவநேசன் மற்றும் கமலேஸ்வரன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X