2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தொலைந்த வங்கிப் புத்தகத்தின் மூலம் பணம் அபேஸ்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

பெண்னொருவர் தொலைத்த வங்கிப் புத்தகம் மற்றும் அடையாளஅட்டை ஆகியவற்றைக் கொண்டு கொழும்பிலுள்ள குறிப்பிட்ட வங்கியின் கிளையில் 5 இலட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த குறித்த பெண், கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற போது, தனது வங்கிப் புத்தகத்தையும் அடையாள அட்டையையும் தொலைத்துள்ளார்.

தொலைத்ததை அறிந்திராத குறித்த பெண், ஞாயிற்றுக்கிழமை(17) தேவை நிமித்தம் வங்கிப் புத்தகத்தை தேடிய போதே வங்கிப் புத்தகம் தொலைந்தமை தெரியவந்தது.

வங்கிப் புத்தகம் தொலைந்துள்ளமை தொடர்பில் வங்கிக்கு தகவல் தெரிவிக்கச் சென்றபோது, இவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 45 இலட்சம் ரூபாய் பணத்தில் 5 இலட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இது தொடர்பில் வங்கி அதிகாரிகள் விசாரணை செய்த போது, கொழும்பு 01இல் அமைந்துள்ள வங்கியின் கிளையிலிருந்து பணம் எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், திங்கட்கிழமை(18) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X