2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

திலீபன் நினைவஞ்சலி

George   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்   

தியாகதீபம் திலீபனின் நினைவுநாள் தொடக்க தினமான நேற்று வியாழக்கிழமை (15) நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் சுடரேற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.   

இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இராசையா பார்த்தீபன் எனப்படும் திலீபன், 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதமிருந்து, 26 ஆம் திகதி உயிர்நீர்த்தார்.   

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படவேண்டும், புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்படல்வேண்டும்,

இடைக்கால அரசு நிறுவப்படும் வரையில் புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படவேண்டும, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும், இந்திய அமைதிப் படையின் மேற்பார்வையில் நியமிக்கப்பட்டுள்ள ஊர்காவற்படை என்று அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப் பெறப்படவேண்டும் மற்றும் தமிழ் கிராமங்கள், பாடசாலைகள் ஆகியவற்றில் நிலைகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும் ஆகிய, 5 கோரிக்கைகளை முன்வைத்தே, திலீபன் உண்ணாவிரதமிருந்து உயர்நீத்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X