2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பழை எரிபொருள் நிரப்பு நிலையம் மக்களிடம் கையளிப்பு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் வசமிருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று புதன்கிழமை (10), வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலர் க.சிறிமோகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி 201.3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்திருந்தாலும், அதனை இராணுவத்தினரே தொடர்;ந்து பயன்படுத்தி வந்தனர்.

எனவே, தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என மக்கள் கோரி வந்தனர்.

இந்நிலையில், அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை  இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக நேற்று புதன்கிழமை கையளித்துள்ளனர்.
மக்கள் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த பின்னர் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை, இராணுவத்தினர் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு பயன்படுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X