2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

தொழிற் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாறிய பெண்ணுக்குப் பிணை

Thipaan   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சிறு தொழில் முயற்ச்சியாளர்களுக்கு வங்கி கடன் பெற்று தருவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த ஊரெழு மேற்கு சுன்னாகம் பகுதியினை சேர்ந்த பெண்ணை 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப்பிணை, மற்றும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணை கொண்ட நிபந்தனை பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் என்.தம்பிமுத்;து, வெள்ளிக்கிழமை (18) அனுமதியளித்தார்.

குறித்த பெண் இதுவரை 52 பேரிடம் சிறு சிறு தொகை பணத்தினை பெற்று வங்கியூடாக சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான கடன் பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்.

எனினும் அப் பெண் பணம் எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதற்காக அவரால் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களையும் பொலிஸார் சான்றுப்பொருளாக மீட்டுள்ளனர்.

இவரை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திபோது நிபந்தனை பிணையில் செல்ல அனுமதியளித்ததுடன் வழக்கினை ஜனவரி மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

மேற்படி பெண்ணிடம் பணத்தினை கொடுத்து ஏமாந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு பணித்த பதில் நீதவான், இதுவரை முறைப்பாடு வழங்கிய 9 நபர்களின் பூரணமான அறிக்கையினை மன்றிற்கு சமர்பிக்குமாறு சுன்னாகம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X