2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தொழில் செய்வதற்கு மணல் அணைகளை அகற்றி தாருங்கள்

Niroshini   / 2016 மார்ச் 09 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

'மீள்குடியேறிய நாங்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு, கடற்கரையில் காணப்படும் இராணுவத்தினரின் மண் அணைகளை அகற்றித்தாருங்கள்' என பலாலி, வடக்கு அன்ரனிபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி பகுதி கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. அன்ரனிபுரத்தில் 40 மீனவக் குடும்பங்கள் மீளக்குடியேறத் தயாராகி வருகின்றன.

அதாவது, விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கொட்டில்கள் அமைத்து மீளக்குடியேறினால் மாத்திரமே வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து, கொட்டில்கள் அமைத்து மீளக்குடியேற தயாராகி வருகின்றோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மீளக்குடியேறும் போது, எங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்கரையிலுள்ள இராணுவத்தினரின் மண் அணைகள் தடையாகவுள்ளன. எங்கள் படகுகளை கடலுக்குச் கொண்டு செல்ல முடியாத வகையில் இந்த மண் அணைகள் காணப்படுகின்றன.

ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் அணைகளை அகற்றித் தந்தால் நாங்கள் மீளக்குடியேறி, தொழில் நடவடிக்கைகளைச் செய்வதுடன், வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ளவும் இலகுவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X