2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கற்றைநெறியைக் கற்று வெளியேறிய மாணவர்கள், தங்களுக்கு அரசாங்க வேலையைப் பெற்றுத்தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று புதன்கிழமை (06) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

வடமாகாண தொழில்நுட்பச் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. தங்கள் சங்கத்தில் மொத்தம் 350பேர் இருப்பதாகவும் தங்களுக்கு நிபந்தனைகள் இல்லாமல் நேரடியாக உள்வாங்கும் படியும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களும் தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X