2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தீவகம் தனது கட்டுப்பாட்டில் இருந்ததை ஒப்புக்கொண்ட டக்ளஸ்

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதி கடந்த 2004ஆம் ஆண்டு வரையில் எனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அதன்பின்னர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சாதாரண நிலைக்கு வந்துவிட்டோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஒத்துக்கொண்டார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமர்வில் அரியாலையைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் தனது கணவர் காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளித்தார்.

இதன்போது, அரியாலைப் பகுதியில் ஒரு பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் ஒரு பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் இருந்தது எனத் தெரிவித்தார். தமது வீடு இருந்த பகுதி ஈ.பி.டி.பி யின் கட்டுப்பாட்டில் இருந்தது எனவும் கூறினார். யாழ்ப்பாணம் எவ்வாறு ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது என விளங்கவில்லை. தீவகம் எமது கட்டுப்பாட்டில் இருந்தது என்று கூறியிருந்தாலும் பரவாயில்லை. யாராவது சொல்லிக்கொடுத்தோ அல்லது தடுமாற்றமான சாட்சியமாக அந்தச் சாட்சியம் அமைந்திருக்கலாம்.

எமது கட்சி யாழ்ப்பாணத்துக்கு வராமல் விட்டிருந்தால், 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு என்ன நடந்ததோ அது யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றிருக்கும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .