2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தீவுப்பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக இறைச்சி கடத்தல்

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

  -எஸ்.ஜெகநாதன்

தீவுப் பகுதியிலிருந்து கால்நடைகளின் இறைச்சிகள் கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

வேலணைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது, அதில் கலந்துகொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸார் இதனை தெரிவித்தனர்.

வேலணை உள்ளிட்ட பகுதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகள் மற்றும் வளர்ப்புக் கால்நடைகள் இறைச்சியாக்கப்பட்டு கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்படுகின்றன.

தீவுப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளப்படும் இவ்வாறான கடத்தல்களை தவிர்க்க மண்டைதீவுப் பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ள போதும், கடத்தல்கள் கடல் மார்க்கமாக இடம்பெறுவதால் அதனைத் தடுக்க முடியாமல் இருப்பதாகவும் பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X