Editorial / 2018 மே 04 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்

தேசிய மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு யாழ் நகரை பசுமைப்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று (04) நடைபெற்றது.
எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி பொருத்தமான இடங்களில் பொருத்தமான மரங்களை நாட்டுவதற்குரிய ஏற்பாடுகளை ஆராய்வதுக்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், யாழ் மாநகர மேயர் இ.ஆனோல்ட், மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், வனவளத்திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நீர்பாசனத்திணைக்களம் மற்றும் முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள் சாரணர், லயன்ஸ் கழகங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடமாகாணசபை, யாழ். மாநகர சபை, வடமாகாண ஆளுநர் செயலகம் உட்பட அனைத்து திணைக்களங்களின் பங்களிப்புடன் யாழ் நகரை பசுமைப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்படும் என இதன்போது வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.
15 minute ago
16 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
16 minute ago
36 minute ago
3 hours ago