2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நகர அபிவிருத்தி அமைச்சினால் யாழ்.நகர அபிவிருத்தித் திட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உலக வங்கியின் நிதியுதவியுடன் நகர அபிவிருத்தி அமைச்சால், யாழ்.மாநகர அபிவிருத்தி வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் ஆராய்வதற்காக உலக வங்கியின் நிபுணர் குழு, ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

போக்குவரத்து பிரச்சினை, வடிகால்கள் மற்றும் குளங்கள் புனரமைப்பு, வெள்ள அபாயத்தை தடுக்கும் நடவடிக்கை, பொதுமக்களுக்கு அதிக அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆஸ்பத்திரி வீதி மற்றும் கந்தப்பசேகர வீதி ஆகியவற்றை அகலமாக்கி புனரமைத்தல், கிட்டு மற்றும் பழைய பூங்கா ஆகியவற்றை புனரமைத்து மக்கள் பாவனைக்கு விடுதல், உள்ளூர் தனியார் போக்குவரத்து பஸ்கள் தரிப்பிடத்தை புல்லுக்குளத்துக்கு அண்மையில் அமைத்தல், வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் தனியார் மற்றும் போக்குவரத்துச் சபை பஸ்களின் தரிப்பிடத்தை யாழ்.புகையிரத நிலையத்துக்கு பின்புறமாக ஸ்ரான்லி வீதியில் அமைத்தல், நல்லூர் சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை, யமுனா ஏரி ஆகியவற்றை புனரமைத்து சுற்றுலாத்தளமாக மாற்றுதல், யாழ்.மாநகர சபைக்குட்பட்ட குளங்களை புனரமைத்து அழகுபடுத்தல், யாழ்.நகரத்திலுள்ள பழைய வடிகாலமைப்பை புனரமைத்தல் மற்றும் தேவையான புதிய வடிகாலமைப்புக்களை அமைத்தல் ஆகிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல், கடந்த 18ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகத்தில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X