2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நகைகளை அடகு வைத்த பெண்ணுக்கு விளக்கமறியல்

George   / 2016 மே 17 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக்கொடுத்த குற்றச்சாட்டில் கைதான பெண்ணை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் டி.கருணாகரன், திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார்.  

அச்சுவேலி மற்றும் நவக்கிரி பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் கொள்ளையிடப்பட்ட நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக்கொடுத்த குற்றச்சாட்டில் அவர் கைதாகியுள்ளார்.

சுன்னாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய குறித்த பெண், அச்சுவேலி பொலிஸாரால் கடந்த 15ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

இந்தக் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் ஏற்கெனவே கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கொள்ளையடித்து கொடுக்கும் நகைகளை இந்த பெண் அடகுவைத்து பணம் பெற்றுக்கொடுத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் மேலும் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X