2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது ஆண்டையொட்டி, மாங்குளம் பொலிஸார் ஏற்பாடு செய்த நடமாடும் சேவை, திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் முன்பாக நேற்று (30) காலை 10.00 மணிக்கு மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாலின் பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்றது.

இந்நடமாடும் சேவையூடாக அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுக்கான பொலிஸாரின் முறைப்பாட்டு பிரதி போன்ற பொலிஸாரிடம் பெறவேண்டிய அனைத்து சேவைகளையும் காணிப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் செய்துகொள்ள முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த ஒரு மாத காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், சிரமதானப் பணிகள், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள், மக்களுக்கான சேவைகள், மர நடுகை பாடசாலை மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வு வேலைத்திட்டம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X