2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நந்திக்கடலோரப் பகுதியில் இராணுவ வேலி அகற்றப்படாமையால் மீனவர்கள் பாதிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, நந்திக்கடலோரமாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ வேலியால் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 300 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேப்பாப்புலவு, வற்றாப்பளை, நீராவிப்பிட்டி, கிச்சினாபுரம் மீனவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினரால் இந்த வேலிகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து, மக்கள் மீளக்குடியேறி தொழில்களை ஆரம்பித்த பின்னரும் இந்த வேலிகள் இதுவரையில் அகற்றப்படாமல் இருக்கின்றது.

இதன் காரணமாக 300 ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் நந்திக்கடலில் தொழில்புரிவதற்கு, நீண்டதூரம் செல்லவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

இராணுவ வேலியினை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸன் ஆகியோரிடம் கோரிக்கைகள் விடுத்தும் இதுவரையில் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X