Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாமல் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த சமாதான புத்தாண்டு உதயம் 2019 எனும் தொனிப்பொருளிலான தேசிய நல்லிணக்கப் புத்தாண்டு பெருவிழா யாழில் நேற்று (09) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியமைக்கு பெருமையடைகின்றேன். இலங்கை முழுதும் எமது அலுவலகத்தினால் நடைபெறும் வேலைத்திட்டத்தில், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத்து மாணவர்கள் பயனடைகின்றார்கள்.
சிங்களவர்கள் தனியாகவும், தமிழர்கள் தனியாகவும் புத்தாண்டு நிகழ்வுகளை நடத்துவது சம்பிரதாயத்திற்கு முரணானது. இந்த வருடத்தில் இருந்து, தமிழ் சிங்கள முஸ்லீம் மாணவர்கள் ஒன்றிணைத்து இந்த புத்தாண்டு நிகழ்வுகளை நடத்த வேண்டும். தமிழ் சிங்களவர்கள் என்ற பாகுபாடின்றி, இலங்கையர்கள் என்ற சிந்தனையுடன் செயற்பட்டால், நாட்டை முன்னேற்ற முடியும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடைந்து சின்னாபின்னமாக கிடந்த யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சகோதரத்துவம் வாய்ந்த நிகழ்வினை நடாத்துவதை இட்டு பெரும் மகிழ்வடைகின்றேன். எனவே, இவ்வளவு காலமும் சிங்களவர்கள், தமிழர்களுக்கிடையில் புரிந்துணர்வு இருக்க வில்லை. தமிழ் சிங்கள கலாசாரத்தை ஒன்றிணைத்து பொதுவான புத்தாண்டை நடத்த தீர்மானித்தோம். நாட்டில், இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்பட்டால், பிரச்சினைகள் இன்றி கண்ணியத்துடன் வாழ முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago