Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ் ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா இன்று (18) வெள்ளிக்கிழமை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் ஆரம்பமாகியது.
தமிழகத்தில் இருந்து விழாவிற்கென வருகை தந்த 25 பேராசிரியர்கள் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தாரால் நல்லூர் கந்தசுவாமி கோவில் வாயிலில் இருந்து மங்கல இசையுடன் அழைத்துவரப்பட்டனர். வரவேற்பு ஊர்வலத்தில் இந்தியத் துணைத்தூதுவர், நல்லை ஆதீன முதல்வர் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (18) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. காலை அமர்வில் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழக மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர்.
யாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கிருபாசக்தி கருணா சிலப்பதிகார வாழ்த்து இசைத்தார். தமிழ்ச்சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையையும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரையையும் இந்தியத் துணைத்தூதர் சங்கர் பாலச்சந்திரன் வாழ்த்துரையையும் வழங்கினர். அமர்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரிய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
44 minute ago
57 minute ago