2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நல்லூரில் தாக்குதல்: அறுவருக்கு மறியல் நீடிப்பு

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணம் – நல்லூர், முத்திரைச்சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 42 மறியல்காரர்களில் 6 பேர், யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில், நேற்று (03) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

 

இதன்போது, மூவர் அடையாளங்காண்ணப்பட்டதையடுத்து, சந்தேக நபர்கள் 6 பேரினதும் விளக்கமறியல் ஜூன் 10ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

நல்லூர் – முத்திரைச்சந்தியில், மே 11ஆம் திகதியன்று, பிற்பகல் 2 மணியளவில் 10 மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அடாவடியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X