Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், எஸ். நிதர்ஷன்
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவான இன்றைய தினம் (17), கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களின் நகைகள் அபகரிக்கப்பட்ட 8 சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளனவென, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 7 தங்கச்சங்கிலி, 1 தாலிக்கொடி உட்பட எட்டு பக்தர்களின் நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நகையைப் பறிகொடுத்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன், நல்லூர் கோவில் வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்கள், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்லடி, செங்கலடி பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
32 minute ago
46 minute ago