Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட திருநெல்வேலிச் சந்தை உள்ளிட்ட முக்கிய சந்திகளில், சி.சி.டி.வி கமெரா பொருத்தும் நடவடிக்கைககள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
இதற்கான கேள்வி கோரல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதன் முதல் கட்டமாக, திருநெல்வேலி சந்தையின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், கொக்குவில் சந்தி, கோண்டாவில் சந்தி, திருநெல்வேலி சந்தி, ஓட்டுமடச்சந்தி, ஆடியபாதம் சந்தி ஆகிய பகுதிகளில் கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன.
வீதியோரங்களில் கழிவுப்பொருட்களைக் கொட்டுவோரை கண்காணிக்கவும் சந்தை வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கவும் குற்றச் செயல்களைக் கண்காணிக்கவுமே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .