Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 31 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம், நாவற்குழி சிங்களக் குடியேற்றப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தாதுகோபுரத்துக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய, யாழ். ஓருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
குறித்த வழக்கினை கொண்டு நடத்துவதற்கான உதவிகளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் வழங்குவதெனவும், உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற மேற்படி ஒருங்கிணைப்புப் குழுக் கூட்டத்தின் போது, மேற்படி தாதுகோபுரம் பற்றிப் பேசப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட வடமாகாண சபையின் எதிர்க் கட்சித்தலைவர் எஸ்.தவராசா, “நாவற்குழியில் புதிதாக தாதுகோபுரம் நிர்மாணிக்கப்படுவதற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
“அண்மையில், உரிய அனுமதி பெற்றுக்கொள்ளாமல் அமைக்கப்பட்ட பிள்ளையார் மற்றும் வைரவர் ஆலயங்களின் கட்டடங்களை இடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பிள்ளையாருக்கும் வைரவருக்கும் உரிய சட்டமே, புத்தருக்கும் உரியதாகும். எனவே, சாவகச்சேரி பிரதேச சபை சட்டத்துக்கு முரணான வகையில், குறித்த தாதுகோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அதனால், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இதனை, சாவகச்சேரி பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளருடன் கலந்தாலோசித்து, வழக்கினை தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட இணைத்தலைவர் மாவை சேனாதிராஜா,
“பிரதேச சபையினால் தாக்கல் செய்யப்படும் வழக்கினைக் கொண்டு நடத்துவதற்கான உதவிகளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபையினைச் சேர்ந்தவர்கள் வழங்குவார்கள்” என்றார்.
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago