2025 மே 19, திங்கட்கிழமை

நிதி நிறுவன ஊழியர்களிடம் கொள்ளை

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.சுன்னாகம் பகுதியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் பணத்தை மூவரடங்கிய கொள்ளைக்குழு கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

சுன்னாகம் சூராவத்தை பகுதியில் நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்று உள்ளது.

குறித்த இரு ஊழியர்களும் தமது நிறுவனத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற போது, சூராவத்தை பகுதியில் முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்திருந்த மூவர் ஊழியர்களை மறித்து தாக்கி விட்டு அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X