Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 மார்ச் 25 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்களின் நினைவு தின நிகழ்வு, நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில், நேற்று (24) நடைபெற்றது.
கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் சிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளையைத் தொடக்கி வைத்தார்.
நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவத்தமிழ் வித்தகம் என்ற நினைவு நூலை வெளியிட்டு வைத்தார்.
அத்துடன், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் சார்பாக அமரர் சிவ. மகாலிங்கத்துக்கு தேகாந்த நிலையில் திருமந்திரக் கலாநிதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.
ஆதீன முதல்வருடன் வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, ஓய்வு பெற்ற பேராசிரியர் ம.வேதநாதன் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .