Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வாழ்வக அன்னை கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி நினைவு நாளும் நினைவுப் பேருரையும், சுன்னாகம் வாழ்வக செல்வா மண்டபத்தில் வாழ்கத் தலைவர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில், நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித அன்னையின் நிலைக்கு மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன் போது, மாணவர்களின் இறைவணக்கத்தை தொடர்ந்து வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் உள்ளிட்ட உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சைகள் பிரதி ஆணையாளர் செல்வத்துறை பிரணவதாசன், வலிகாமம் கல்வி வலய கல்விப் பிரதி பணிப்பாளர் நடராசா காண்டிபன், யாழ். இராமநாதன் கல்லூரி அதிபர் கமலராணி கிருஸ்ணபிள்ளை, கிறீன்கிறாஸ் நிர்வாக முகாமையாளர் தியாகராசா ஜெகசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .