Princiya Dixci / 2022 மே 17 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில், நினைவேந்தல் நிகழ்வுக்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமின்றி அனைவரையும் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நாளை (18) உணர்வெளிச்சியுடன் இடம்பெறவுள்ளது.
வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான அருட்பணி லியோ அடிகளார் மற்றும் பொதுமக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி, நினைவேந்தல் ஏற்பாட்டு வேலைகளையும் சிரமதான பணிகளையும் இன்றும் (17) நேற்றும் (16) முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் செய்ய எந்தத் தடையும் இல்லை என பிரதமர் தெரிவித்தாலும் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் அமைக்கப்பட்டமைக்கு உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு, நினைவேந்தல் வளாகத்தை சூழ பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நினைவேந்தல் வளாகத்துக்குள் வருபவர்களை பொலிஸார் பதிவு செய்து அச்சுறுத்தல் விடுதும் வருவதாக உறவுகள் குற்றம் சுமத்துகின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago