Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஜூலை 24 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இன்றுள்ள போட்டிச் சந்தையில் நுகர்வோர் எங்களைத் தேடிவந்த காலம்போய், நுகர்;வோரைத் தேடிச் சென்று விற்பனை செய்யும் காலம் ஏற்பட்டுள்ளது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கெயார் நிறுவனமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வணிக கண்காட்சியும் தொழிற்;சந்தை நிகழ்வும் சனிக்கிழமை (23) நடைபெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து அவர் கூறுகையில்,
'அரச சார்பற்ற நிறுவனங்;களால் இலவசமாகவோ அல்;லது மானிய அடிப்படையிலோ எமது மக்களுக்கு பொருட்களை வழங்கி எதையுமே இலவசமாக எதிர்;;பார்க்கக்கூடிய மனோநிலையை உருவாகியுள்ளது. இதுந்தாலும் கூட இளைய சந்ததி தாங்கள் தொழில் முனைவோராக மாறி, எதையும் சாதிக்க வேண்;டும் என்ற துடிப்;புடன் எழுந்திருப்பதையும் நாம் அவதானித்திருக்கின்;றோம்.
அதனுடைய அம்சமாக தான் இந்த தொழிற் சந்தையையும் உற்பத்தி பொருட்;களின் கண்காட்சியையும் பார்;த்திருக்கின்றோம். எங்களிடம் திறன் மிக்க விவசாயிகள் உள்ளனர். 24 மணி நேரமும் காணிகளில் வேலை செய்வதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. அதேபோன்று தான் ஏனைய துறைகளிலும் தமது முழு முயற்சிகளையும் கொடுத்து உற்பத்தியில் ஈடுபடும் ஆற்றல் அவர்களிடமுள்ளது.
ஆனால், நாங்கள் அதிகம் அவதானித்த குறைப்பாடு சந்தைப்படுத்;தலாகும். இப்போது போட்டி அதிகம். உலகமயமாதல் என்பதிற்கு அப்பால் தென்னிலங்கையில் இருந்;து வரும் வியாபாரிகளிடம் ஏனையவர்களிடமும் போட்டியிடவேண்டியுள்ளது' என்றார்.
13 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago