2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நாணயங்களுக்குத் தட்டுப்பாடு

Gavitha   / 2016 ஜனவரி 20 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நாணயக் குற்றிகளுக்கு அண்மைக்காலமாக பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

வங்கிகளில் கூட நாணயங்கள் இல்லாத நிலையில், நாணயக் குற்றிகள் வேண்டும் என வங்கிகளில் முற்பதிவு செய்தே நாணயங்களை வர்த்தகர்கள் பெற்று வருகின்றனர்.

சில்லறை நாணயங்களின் தட்டுப்பாட்டுடன் 10 ரூபாய் தாளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. முன்னர் மீதிக்காசாக 1 அல்லது 2 ரூபாய்கள் இல்லையென அதற்கு பதிலாக இனிப்புப் பொருட்கள் வழங்கப்படும். ஆனால் இப்போது 10 ரூபாய்க்கு மீதி இல்லையென அதற்கு வர்த்தகர்கள் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

குபேரன் சிலைகளின் அடியிலும், உண்டியல்களிலும் பெருமளவு சில்லறைக் காசுகளை பொதுமக்கள் சேமித்து வைப்பதால் நாணயங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X