2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நியமனக்கடிதம் கிடைக்கும் வரை உண்ணாவிரதம்

Kogilavani   / 2016 மார்ச் 15 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் 34 பேருடன் இணைந்து யாழ்.மாவட்ட பிரதேச சுகாதார பணிமனையில் பணிபுரியும் 22 கிராமிய சுகாதார உதவியாளர்கள், 28 யாழ் மாநகர சபை சுகாதார தொண்டர்கள் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் எனக்கோரி மேற்படி தொண்டர்கள் பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதாரத் திணைக்கள அலுவலகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (15) உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.

நியமனம் வழங்குமாறு அனுமதிக்கடிதம் மத்திய அமைச்சினால் மாகாண சபைக்கு அனுப்பட்டுள்ளது எனக்கூறி, அனுமதி கடிதத்தின் பிரதியை எம்மிடம் தந்துள்ளனர். இருந்தும் நியமனக் கடிதம் இன்னமும் தமக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்து இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X