2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நேரங்கடந்து வீட்டுக்கு சென்றவர் கைது

George   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, மிரிஸ்ஸ பிரதேசத்தில் வீடொன்றுக்குள் அநவசியமான முறையில் நுழைய முற்பட்டு அந்த வீட்டுக்கு சேதம் விளைவித்த வெளிநாட்டவர், திங்கட்கிழமை இரவு வெலிகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துருக்கி நாட்டு பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இரவு 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்த  இந்த நபர், தான் பொலிஸ் என்றும் கதவை திறக்குமாறும் ஆங்கிலத்தில் சத்தமிட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த துருக்கி பிரஜை நன்றாக குடித்து அதிக போதையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றனது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .