2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார தொண்டர்கள் சிலர், நிரந்தர நியமனம்  கோரி, நேற்று(25), மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

காலை, கூட்டம் ஆரம்பிக்கப்பட்டவேளையிலிருந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்கள், கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து மகஜர்களை கையளித்து கலந்துரையாடினார்கள்.

இந்த மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர், வடமாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி, அவர்களுக்கான தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X