2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நீர் விரயமாவதை தடுக்க நிபுணர்களுடன் பேசினோம்: சி.வி

Gavitha   / 2017 மே 13 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

நீர் விரயமாவதைத் தடுப்பது குறித்,து அவுஸ்திரேலியா நாட்டின் நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீர் மையத்திலிருந்து அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கைலி மிலிகன், பாப்லோ போரன்ஸ் என்ற இரு செயற்றிட்ட அலுவலர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை, முதலமைச்சர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (12) சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே, முதலமைச்சர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

'சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்ரேலியாவுக்குச் சென்றிருந்த வட மாகாண சபை உறுப்பினர்களும் பொறியியலாளர்களும், ஒரு கருத்தரங்கில் பங்கேற்றனர். அந்த கருத்தரங்கின் அடிப்படையில், இங்கு நடப்பவை குறித்தும் செயற்படுத்தப்படவேண்டிய திட்டங்கள் குறித்தும் அறிந்துக்கொள்வதற்காக, அவுஸ்திரேலிய அதிகாரிகள் வந்திருந்தார்கள்.

'கருத்தரங்களில் ஆராயப்படும் விடயங்கள், மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதை, அவுஸ்திரேலிய நிபுணர்கள் அறிவுறுத்தினர். நீர் பயன்பாட்டில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்றும் அதற்கு மக்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்' என்று அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X