2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நீர்வேலி விவகாரம்: வளர்ப்புத் தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் தனது 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டார்.

நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி காலை, முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே சிறுமியைத் தாக்கிய தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்தப்பட்டு, நேற்று வியாழக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாய் உயிரிழந்தமையால், தந்தை வேறு திருமணம் முடித்துள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே, சிறுமியை மிக மூர்க்கதனமாக தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X