2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நேற்று, இருளில் மூழ்கியது அச்சுவேலி

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி தெற்கு வெட்டுக்குளம் பகுதியில் மின்சார இணைப்பு வயர் மீது தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அப் பகுதியூடான போக்குவரத்து, நேற்றுத் திங்கட்கிழமை (14) இரவு முற்றாகப் பாதிக்கப்பட்டது.

இரவு 8 மணியளவில்  திடீரென ஏற்பட்ட சுழல் காற்றினால்  வீதியின் அருகிலிருந்த தென்னைமரம் ஒன்று பாரிய சத்தத்துடன் வீழ்ந்துள்ளது. இதனால் மின்சார வயர்கள் அறுந்து வீழ்ந்து வீதியில் விழுந்தன.

குறித்த வீதியூடாக பயணிக்கும் அணைத்து வாகனங்களும் மாற்று வழியூடாக அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பில் மின்சாரசபைக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து மின்சாரசபையினர் திருத்தப்பணியில் ஈடுபட்டு இன்று செவ்வாய்கிழமை (15) காலை 8 மணியிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அச்சுவேலி பகுதி நேற்று இரவு முற்றாக இருளில் மூழ்கியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X